நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் என்பவர், நடிகையை கடத்தி பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக காவ்யா மாதவன் வீட்டுக்கு சென்று 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் பலாத்காரத்திற்கு பிறகு வென்னலாவில் உள்ள காவ்யா மாதவனின் கடைக்கு சுனில் சென்றதாகவும் கூறப்படுகிறது. நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட வீடியோ அடங்கிய மெமரி கார்டு, காவ்யா மாதவனின் கடையில் கொடுக்கப்பட்டதாக பல்சர் சுனில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து காவ்யா மாதவன் கடையில் சோதனை மேற்கொண்டதுடன், விசாரணையும் நடத்தினர். ஆனால் விசாரணைக்கு காவ்யா மாதவன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தன்னை வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியதாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கொச்சி உயர்நீதிமன்றத்தில் காவ்யா மனு தாக்கல் செய்துள்ளார். எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று காவ்யா மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன