Advertisement

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்படுகிறது

சென்னையில் வழக்கறிஞரை தாக்கியது தொடர்பாக நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை இன்று நடக்கிறது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கட்டுமான நிறுவன மேலாளர் சண்முக சுந்தரத்திடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்ட போது, வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை சந்தானம் தாக்கியதாக கூறப்படுகிறது. நடிகர் சந்தானத்தின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், முன்ஜாமின் கோரி அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரேம்ஆனந்த் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி, இன்றைக்கு ஒத்திவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன