நடிகர் கமலுக்கு துணிச்சல் இருந்தால் அரசியலுக்கு வரட்டும் – ஜெயக்குமார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தமிழக அரசுக்கு எதிராக வாயை திறக்காதது ஏன் என்று நடிகர் கமலஹாசனுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமலுக்கு துணிச்சல் இருந்தால் அரசியலுக்கு வரட்டும் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலுக்கு வராமல் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.

நடிகர் கமலுக்கு ஆதரவாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது குறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், நடிகர் கமலுக்கு முட்டுக் கொடுக்கும் பரிதாப நிலையில் தி.மு.க இருப்பதாக சாடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன