Advertisement

தொழிலதிபர் தவற விட்ட 60 பவுன் நகைகளை காவல் ஆணையரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட 60 பவுன் தங்கநகைகளை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று காலை ஆட்டோவில் செல்லும் போது , முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்து பை ஒன்று தவறி விழுந்துள்ளது. அதை முனியப்பன் எடுத்து பார்த்த போது, அதனுள் தங்க நகைகள், மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன. இதனையடுத்து அந்த பையை மாநகர காவல் ஆணையாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் முனியப்பன் ஒப்படைத்தார்.

பைக்குள் 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே நகையை தவறவிட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரவே அவரை அழைத்து நகைகளை போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் , அவரை ஊக்குவிக்க தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன