தொழிலதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்!

வேலூர் தொழிலதிபர் ஐ.ஜி. ரவி கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தொழிலதிபர் ஐ.ஜி.ரவி, கடந்த 12ஆம் தேதி காட்பாடியில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காட்பாடி விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி திருச்சியில் குப்பன் என்பவர் சரணடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, காட்பாடி போலீசார் வேலூர் அழைத்து வந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் போலிஸ் காவலில் விசாரிக்க நீதித்துறை நடுவர் அனுமதி வழங்கினார். இதையடுத்து குப்பன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன