சினிமா பாணியில் காருக்குள் வைத்து தொழிலதிபர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் காரில் பின் தொடர்ந்து வந்த கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன், தொழிலதிபர் ஒருவரை சுட்டுக்கொன்ற பதைபதைப்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் ((Faridkot)) மாவட்டத்தில் உள்ள ஜெய்தோ ((Jaito)) பகுதியைச் சேர்ந்த ரவீந்திர பப்பு கோச்சார் என்பவர், பஞ்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று தனது பஞ்சாலைக்கு சென்ற அவரை, கூலிப்படையினர் காரில் பின் தொடர்ந்து வந்தனர்.

பஞ்சாலை வாயிலில் கார் நின்றுகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன், தொழிலதிபர் ரவீந்திர பப்பு கோச்சாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, சர்வ சாதாரணமாக காரில் ஏறி செல்கிறான். இந்த காட்சிகள் பஞ்சாலை வாயிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்களை தேடி வருவதுடன், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன