Advertisement

தொண்டை மண்டல ஆதீன மடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக நித்யானந்தா சீடர்கள் மீது புகார்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தை கடத்தி, மடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு, ஆயிரக்கனக்கான கோடி ரூபாய் சொத்துகளும், விலை மதிப்பற்ற மரகத லிங்கம், பாணலிங்கம் ஆகியவையும் உள்ளன. மடாதிபதியாக ஞானபிரகாச தேசிக பரமாச்சாரியர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மடத்துக்கு வருகை புரிந்த நித்யானந்தாவின் சீடர்கள், நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், மடத்தின் கதவுகள் பூட்டப்பட்டு மடாதிபதியும், நித்தியானந்தாவின் சீடர்களும் மாயமாகிருந்தனர்.

இதனால், மடாதிபதி கடத்தப்பட்டிருக்லாம் எனவும், நித்தியானந்தாவின் பிடியிலிருந்து மடத்தினை மீட்கக்கோரியும் தொண்டை மண்டல முதலியார் அமைப்பு சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன