தொடர் விடுமுறையையொட்டி நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந் குவிந்துள்ளனர்.

உதகை தாவரவியல் பூங்காவில் அதிகளவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை தாவரங்களை கண்டு ரசித்ததுடன் புல் தரையில் ஓய்வெடுத்து கொண்டனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மினி படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரியில் ஈடுபட்டனர்.மேலும் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர்.

ஊர்ந்து செல்லும் மலைரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள், இரயில் நிலையத்தில் பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி பயணம் செய்து மகிழ்ந்தனர். ஒரு சிலருக்கு பலமணிநேரம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள், விடுமுறை தினங்களில் கூடுதல் இரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் உதகை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதனை அடுத்து இன்று முதல் 2 நாட்கள் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்பவர்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் வரவேண்டும் என மாவட்டம் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன