Advertisement

தொடர் விடுமுறையால் புதுச்சேரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மதியம் 2 மணிக்குமேல் கடற்கரைச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் புதுச்சேரி கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி செயற்கை மணற்பரப்பு, கருங்கற்கள் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செயற்கை மணற்பரப்பு பகுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கருதி அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி வரை மதியம் 2 மணிக்கு மேல் வாகனங்கள் கடற்கரை சாலையில் செல்ல செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன