தொடர் மழையால், மனோரத்தினம் நீர்தேக்கத்தில் நீர்வரத்து கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக மனோரத்தினம் நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வருகிறது.கொடைக்கானல் சுற்றுப்புறபகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் மனோரத்தினம் நீர்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 36 அடியில் 27 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் தலைமை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் நீர் நிரம்பி காணப்படுகிறது.கடந்த இரண்டு மாதத்திற்கு முன் குடிநீர் பற்றாகுறையால் மக்கள் தவித்த நிலையில் தற்போது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன