தொடர் மழையால் கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கமண்டல நாகநதியில் இரண்டாண்டுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறண்டு காணப்பட்ட கமண்டல நாக நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இரண்டாண்டுக்கு பிறகு இரு கரையையும் தொடும் அளவிற்கு தண்ணீர் செல்வதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நதிக்கரையில் பொதுமக்கள் தேங்காய் உடைத்தும், தீபம் ஏற்றியும் வெள்ளப் பெருக்கை வரவேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன