Advertisement
Advertisement

தொடர்ந்து கனமழை – வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி உரிய முறையில் தேக்கி வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 36 ஏரிகளும், மற்றும் திருவண்ணாமலையில் 4500 ஏக்கர் விளை நிலங்களும், விழுப்புரத்தில் 7500 ஏக்கர் விளை நிலங்களும் பயனடைகின்றன.

இந்நிலையில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக இரவில் திருவண்ணாமலையில் மிகவும் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சேகரிக்க வழி ஏதும் இல்லாத தால் அவை வீணாக கடலில் கலக்கும் நிலையும் உள்ளது.

அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அதிக உயரமுள்ள தடுப்பணைகளை கட்ட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன