தே.ஜ.கூட்டணியில் இணைய நிதிஷ்குமாருக்கு அமித்ஷா அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். நேற்று டெல்லி சென்ற நிதிஷ்குமார், பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் 19ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும், ஐக்கிய ஜனதா தள தேசிய செயற்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதை நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலும் ஐக்கிய ஜனதா தளம் இணையும் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன