தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைக் கண்டித்து அரிதாள் கட்டை எரிக்கும் போராட்டம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் சிலர் தங்கள் வயல்களில் அரிதாள் கட்டை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயல்களில் அறுவடைக்குப் பின் மீதமுள்ள அரிதாள் கட்டைகளை விவசாயிகள் எரிப்பதால் கடும் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில் உள்ள ((Shekhupura)) ஷேகுபுரா விவசாயிகள் தங்கள் வயல்களில் அரிதாள் கட்டை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன