தேசிய கபடி வீராங்கனையை பலாத்காரம் செய்த பயிற்சியாளர்

தேசிய இளம் கபடி வீராங்கனை ஒருவர், மயக்க மருந்து கொடுத்து பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

வடக்கு டெல்லியைச் சேர்ந்த அந்த வீராங்கனையை, மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிச் செல்வதாகக் கூறி, ஜூலை 9-ம் தேதி தனது காரில் பயிற்சியாளர் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்கமடைந்த நிலையில் தன்னை பயிற்சியாளர் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட 16 வயது வீராங்கனை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், பயிற்சியாளரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்தனர். வேலியாய் நின்று காக்க வேண்டிய பயிற்சியாளரே, தேசிய அளவில் சிறந்து விளங்கும் வீராங்கனையை பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன