தெலுங்கானா தனிமாநிலமான பின்னர் காவல்துறையை பலப்படுத்த நடவடிக்கை -சந்திரசேகர ராவ்

தெலுங்கானாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறையை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உறுதியளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் காவல்துறை மாநாட்டில் பேசிய அவர், தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காவல்துறையை பலப்படுத்தவும் காலியிடங்களை நிரப்பவும் தமது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.மற்ற மாநிலங்களைவிட பட்ஜெட்டில் காவல்துறைக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். காவல்துறைக்கு 4 ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், புதிய வாகனங்களுக்காக மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்

173 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன