தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம் – முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், தெலங்கானாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகள் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *