தெருவோர உணவகத்தில் வேன் புகுந்து விபத்து – 9 பேர் காயம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று தெருவோர உணவகத்தில் புகுந்ததில் 9 பேர் காயமடந்தனர். இது தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்றும் விபத்து மட்டுமே என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வேன் விபத்து, லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை ஒத்திருந்ததால் தொடக்கத்தில் அவ்வாறு கருதப்பட்டதாகவும் ஆனால் விசாரணையில் இது விபத்து என்று தெரியவந்துள்ளதாகவும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 44 வயது நபர் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன