தென்கொரியாவுக்கு தப்பிச்சென்ற வடகொரிய ராணுவ வீரர்

தென்கொரியாவுக்கு தப்பிச்சென்ற வடகொரிய ராணுவ வீரர் சகநாட்டு வீரர்களால் சுடப்பட்டார்.பாதுகாப்பு மிகுந்த எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக வடகொரிய வீரர் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாகவும் அவரை வடகொரிய வீரர்கள் சரமாரியாக சுட்டதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சீறிப் பாய்ந்த குண்டுகளில் இருந்து தப்பிக்க ஓடிய அவர், இறுதியில் குண்டடி பட்டு தென்கொரிய எல்லைக்குள் விழுந்ததாகவும் அவர்கள் கூறினர். இந்நிலையில் அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட தென்கொரிய மருத்துவக் குழுவினர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன