தூர்வாரப்பட்ட குளங்களைப் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட குளங்களை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஐ.பெரியசாமியின் தொகுதியான ஆத்தூருக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், சித்தையன் கோட்டையில் உள்ள கருங்குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் தர்மத்துப்பட்டியில் உள்ள கதிரையன் குளத்தையும் ஸ்டாலின் பார்வையிட்டார். திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன