தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்களை அனுமதிக்காததல், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் விமான நிலையம் முன்பு திறண்டனர். விமான நிலையத்திற்கு செல்லமுயன்ற அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விமானநிலைய வளாகத்திலேயே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!