தூத்துக்குடி – வறட்சி காரணமாக தென்னைமரங்கள் கருகியுள்ளதால் விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வறட்சி காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் கருகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. புத்தன்தருவை பகுதியில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வறட்சி காரணமாக கருகி முறிந்து விழுந்துள்ளன. இதனால் தென்னைமரங்களை வளர்த்து வந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!