தூத்துக்குடியில் விவசாயி மர்மநபர்களால் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவரை மர்மநபர்கள் கற்களை வீசி எறிந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு இலந்தைக்குளத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான முத்துப்பாண்டி என்பவர் கயத்தார் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் மறைந்து இருந்து கற்களை வீசி எறிந்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பான முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே கோவில்பட்டி அருகே அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்தானம் பைனான்ஸ் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இருவக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தாக கூறப்படும் நிலையில், நேற்று சந்தானத்தை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தானம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு கொலை சம்பவங்கள் குறித்தும் கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன