தூங்கிக் கொண்டிருந்த 2 சகோதரிகளுக்கு மர்மநபர்களால் தீ வைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பேரெய்லியில் (BAREILLY) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சகோதரிகள் மர்மநபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளனர். 19 மற்றும் 17 வயது நிரம்பிய சகோதரிகள் வீட்டில் கொசுவலைக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, வீட்டிலிருந்தவர்கள் தீயை அணைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மூத்த சகோதரி 95 சதவீத தீக்காயங்களுடனும், இளைய சகோதரி 60 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர் ஒருவர் சில மாதங்களாக தன்னை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக இளைய சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 செல்போன்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன