துர்கா பூஜையில் அமைதியைக் குலைத்து நெருப்புடன் விளையாட வேண்டாம் – RSS அமைப்புக்கு மம்தா எச்சரிக்கை

ஆயுதப்பூஜை, விஜயதசமியை முன்னிட்டு கொல்க்ததா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், துர்கா பூஜையின்போது அமைதியைக் குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு மொகரம் பண்டிகையும் விஜயதசமியும் அடுத்தடுத்த நாளில் வருவதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. அக்டோபர் முதல்தேதி மொகரம் என்பதால் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை என்று கூறிய மம்தா பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றார். ஆயினும் நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன