துப்பாக்கி சூட்டின் போது ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 4 பாக்., வீரர்கள் உயிரிழப்பு

எல்லையில் அத்துமீற முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் வந்த வாகனம் பின்வாங்கிய போது அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீலம் நதியில் இருந்து ஒரு வீரரின் உடலை மீட்டதாகவும் மற்ற 3 வீரர்களின் உடல்களைத் தேடிவருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையின் அருகே ரோந்துப் பணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது இந்திய ராணுவத்தினர் அத்துமீறி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து துப்பாக்கியால் சுட்டதால்தான் வீரர்களின் வாகனம் ஆற்றில் விழுந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!