Advertisement

துபை விமானக் கண்காட்சியில் பிரம்மோஸ் ஏவுகணை இடம்பெற்றது

துபையில் நடக்கும் விமான கண்காட்சி மூலம் இந்தியாவின் சார்பில் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

வளைகுடா நாடான துபையில் தற்போது நடந்து வரும் விமானக் கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் தயாரிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகளை பார்வைக்கு வைத்துள்ளன.

முதன்முறையாக இந்தக் கண்காட்சியில் இந்தியா சார்பில் பிரம்மோஸ் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து பிரம்மோஸ் ஏவுகணை திட்ட பொதுமேலாளர் பிரவீன் பதக் கூறும்போது, ஒலியை விட அதிவேகத்துடன் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணையை மத்தியகிழக்கு நாடுகளில் முதன்முறையாக சந்தைப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன