தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக ரோபோக்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

காஷ்மீரில் கல்லெறி தாக்குதலை சமாளிக்கவும், தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது ராணுவ வீரர்கள் மீது இளைஞர்கள் சிலர் கல்லெறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை சமாளிப்பதற்காக ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்த இந்திய ராணுவம், 544 என்ற எண்ணிக்கையில் ரோபோக்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

இதை பாதுகாப்பு அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. வாங்கப்படும் ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை புகுத்துவது குறித்து செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் மையமும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இந்த வகை ரோபோக்களுக்கு ராணுவத்தின் விவரங்கள், சூழ்நிலைகள் குறித்து புரோகிராம் செய்யப்படும். இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன