தீவிபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிதி

சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்துக்கு 13 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு செய்திக் குறிப்பில், கொடுங்கையூர் தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப விரும்புவதாக கூறியுள்ள முதலமைச்சர், விபத்தில் உயிரிழந்த ஏகராஜின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகையாக 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏகராஜின் குடும்ப நபர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும், தீவிபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன