தீர்ப்பு நாளில் குர்மீத் ராம் ரஹீமை இமாச்சல் தப்ப வைக்க முயற்சி

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான தீர்ப்பு வெளியானதும் அவரை தப்பிக்க வைத்து இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கமாண்டோக்கள் திட்டமிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவருக்கு z plus பாதுகாப்பு அளித்த காவல்துறை கமாண்டோக்கள், அவரை தப்பிக்க வைக்க முயற்சித்தனர். இதைக் கண்ட காவல்துறையினர், அவர்களில் 12 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கலவரம் ஏற்பட்ட போது, ராம் ரஹீமை தப்ப வைத்து அவரது ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இமாச்சலப்பிரதேசத்திற்கு தப்ப வைக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்ட கமாண்டோ கூறி இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!