தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தீப்பெட்டி கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

மூலச்சல் பகுதியில் கிங்நிக்சன் என்பவர் நடத்தி வரும் தீப்பெட்டி கம்பெனியில் நேற்றிரவு புகையுடன் பற்றிய தீ சற்று நேரத்தில் மளமளவெனப் பரவியது தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இரவு நேரம் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் காகிதம் ஆகியவை எரிந்து சாம்பலாகியது. இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!