திற்பரப்பு அருவியில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

தொடர் விடுமுறை என்பதால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறு பொது விடுமுறை, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி, செவ்வாய் சுதந்திர தின விழா என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தளங்களில் மக்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். மிதமான தண்ணீர் மட்டுமே விழுந்தபோதிலும், சுற்றுலா பயணிகளின் ஆர்வம் குறையவில்லை. படகு சவாரி செய்யும் இடம், சிறுவர் பூங்கா , நீச்சல் குளம் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் சீசன், களை கட்ட துவங்கி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன