திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும்

திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது, கேன்டீனில் எம்.ஆர்.பி விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் உள்ளன. அதேசமயம் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதித்தும் அது நடைமுறைக்கு வரவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்துவிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரையரங்குகளில் நாளை முதல் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திரையரங்க கேண்டீன்களில் எம்ஆர்பி விலைக்குத்தான் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு பார்வையாளர்களே தண்ணீர் கொண்டுவருவதை அனுமதிக்க வேண்டும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது போன்றவற்றையும் வலியுறுத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மீறி செயல்படும் திரையரங்குகள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வது எனவும் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன