திருவண்ணாமலை – கழிவுநீர் கலந்த குடிநீரால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கிராம மக்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாடிநொளம்பை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக, வினியோகம் செய்யப்படும் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மருத்துவக் குழுவினரும் அங்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிராம நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!