திருவண்ணாமலை:செங்கம் அருகே ஏறு தழுவுதல் போட்டி!

செங்கம் அருகே நடைபெற்ற ஏறு தழுவுதல் போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஏறு தழுவுதல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். காளைகளின் கொம்பில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை அவிழ்த்த வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன