திருப்பூர் அருகே தலைமையாசிரியர் வீட்டில் 50 சவரன் , ரூ 10,000 திருட்டு

திருப்பூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டடுள்ளது. பொங்கலூரைச் சேர்ந்த மனோகர், பொல்லி காளிபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நிகழ்வு நாள் அன்று அவர் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்த து. வீட்டில் இருந்த 50 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன