திருப்பூரில் 23 சாயப்பட்டறைகளுக்கு அதகாரிகள் சீல் வைத்தனர்

திருப்பூரில் 23 சாய சலவைப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மழையை சாதகமாக பயன்படுத்தி சாய கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் கலந்துவிட்டதாக எழுந்த புகாரே இதற்குக் காரணம். பொதுவாக சாய சலவைப்பட்டறைகள் கழிவு நீரை சுத்தகரித்து ஜீரோ டிஸ்சார்ஜ் செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது உத்தரவு. இதை மீறியதாக எழுந்த புகாரையடுத்து காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பொது சுத்தகரிப்பு நிலையம் மற்றும் 23 சாய சலவைப்பட்டறைகளில் ஆய்வு செய்து, அவற்றை இயக்க வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பினர் .

இதனைத்தொடர்ந்து இன்று ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இளங்குமரன், 23 சாய ஆலைகளும் மறு உத்தரவு வரும் வரை செயல்படாதவாறு சீல் வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன