திருப்பூரில் பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையிலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு இரண்டாம் கட்டமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது கனமழை பெய்துள்ள நிலையில், அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமரவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அமராவதி அணையிலிருந்து 47 ஆயிரத்து 117 ஏக்கர் பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்டமாக ஆயிரத்து 916கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நீரை திறந்து வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன