Advertisement
Advertisement

திருப்பதி சென்று திரும்பியபோது விபத்து – 4 தமிழர்கள் பலி

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே கார் – லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர். திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு காளஹஸ்திக்கு அவர்கள் காரில் சென்றனர்.

ஏற்பேடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிரிந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஆந்திர போலீசார் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன