Advertisement
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் வருடாந்திர கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை 7 மணிக்கு தங்க கதவு அருகே மலையப்ப சுவாமி கருடாழ்வார் எதிரிலும் தெற்கு திசையை நோக்கி இருக்கும் விதமாக விஷ்வ சேனாதிபதி உற்சவர்கள் கொலு வைக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டு சிறப்பு நெய்வேத்தியம் சமர்பிக்கப்பட்டது. பின்னர் 1 ரூபாய் நாணயத்தை துணியில் வைத்து கட்டி புதிய கணக்கு சம்பர்தாய முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன