திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் முன்பு படுத்து உறங்கினர். கோடை விடுமுறை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவதால், வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன.

இதனால் பக்தர்கள் வெளியே காத்திருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்கள் நாராயணகிரி தோட்டத்தில் காத்திருந்து 10 மணிநேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 300 ரூபாய்க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திற்குபிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!