திருப்பதி அருகே பொதுமக்கள் மீது லாரி பாய்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பலி

சித்தூர் மாவட்டம் மோனஹளபாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், ஊர் பிரச்னை தொடர்பாக ஏர்பேடு காவல் நிலையத்தில் மனு அளிக்க சென்றனர். முன்னதாக, இவர்கள் காவல் நிலையம் அருகேயுள்ள தேநீர் கடை வாசலில் நின்று தேநீர் பருகியுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து காளஹஸ்தி நோக்கிச் சென்ற சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்துள்ளது. இந்த லாரி, பொதுமக்கள் மீது பாய்ந்ததில், 20-க்கும் மேற்பட்டோர் பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மேலும் சிலர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன