திருச்சி, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை

திருச்சி, விருதுநகர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்த நிலையில் ஞாயிறன்று மாலை பரவலாக மழை கொட்டியது. ஒரு மணிரேம் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

விருதுநகரில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஒரு மணிநேரம் நீடித்த மழையால் வெப்பம் தணிந்து அப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

கொடைக்கானலில் பொழிந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவியதால், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இதேபோல், சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பரமக்குடி ஆகிய இடங்களில் பரவலாக மழைப் பொழிவு காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன