திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை நடத்தினர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த பிரகாஷ், பிரபாகரன் ஆகிய இரு பயணிகள் தங்கள் உடைமைகளில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள180 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!