திருச்சியில் மழையால் உறுதியிழந்த ரயில்வே பாலம்

திருச்சியில் மழை காரணமாக, கரூர் மார்க்க ரயில்கள் செல்லும் பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானம் உறுதி இழந்ததால் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

மேலப்புதூர் – கெம்ஸ் டவுன் இடையே உள்ள இந்த ரயில் பாலத்தின் அருகே குடியிருப்புகளும், 4 பள்ளிகளும் உள்ளன. நேற்று பெய்த பலத்த மழையால், பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி, மண் சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து ரயில்வே பொறியாளர்களும், ஊழியர்களும் மணல் மூட்டைகளை அடுக்கினர். அப்போது, அவ்வழியே வந்த மங்களுர் எக்ஸ்பிரஸ் ரயில், வேகத்தை குறைத்து பாலத்தின்மீது இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருப்புப் பாதையை பலப்படுத்தும் பணி நடத்தப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன