திரிணாமூல் காங்கிரசின் புதிய தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு

திரிணாமூல் காங்கிரஸ் புதிய தலைவராக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வாகியுள்ளார். அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் புதிய தலைவராக, மம்தா பானர்ஜ் தேர்வானதாக, திரிணாமூல் காங்கிரசின் துணைத்தலைவர் முகுல்ராய் அறிவித்தார்.தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, தலைவர் பொறுப்பை வேறு யாரிடமாவது அளித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களுக்காக உழைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன