திரவ போதைப்பொருளை பழச்சாறாக குடித்த மெக்சிகோ இளைஞர்

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் மெக்சிகோ இளைஞர் ஒருவர் திரவ போதைப்பொருளை குடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

இரு நாட்டு எல்லையான San Ysidro Port என்ற இடத்தில் அமெரிக்காவுக்குள் செல்ல முயலும் அவரிடம், அதிகாரிகள் வழக்கமான விசாரணை நடத்துகின்றனர். அவர் கொண்டு செல்லும் பாட்டிலில் இருப்பது குறித்து கேட்கையில், பழச்சாறு என்று கூறுவிட்டு, மிக சாதாரணமாக அருந்தியும் காட்டுகிறார் இளைஞர். ஆனால் சற்று நேரத்தில் துவண்டு விழுந்த இளைஞர், உயிரிழந்தார். விசாரணையில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட திரவ வடிவ மெத்தாம்பெட்டாமைன் ((methamphetamine )) என்ற போதைப்பொருளை அவர் குடித்தது தெரியவந்தது.

2013-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன