திமுக ஆட்சிக் காலத்தில் எந்த காய்ச்சல் என தெரியாமல், மர்ம தேசமாக இருந்தது தமிழகம் – ஜெயக்குமார்

திமுக ஆட்சிக்காலத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் மர்ம தேசமாக இருந்தது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் எண்ணுவதாகக் குற்றம்சாட்டினார்.

டெங்குவால் இறப்பு ஏற்படும்போது சான்றிதழ் அளிக்க மறுப்பதாகக் கூறப்படுவது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு என்றும், முறையாகப் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன