Advertisement

திண்டுகலுக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், சேப்பாக்கம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் 53 ரன்களும், வில்கின்ஸ் விக்டர் 45 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய சேப்பாக்கம் அணி நிதானமாக ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில், அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது. உத்தரசாமி சசிதேவ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன