திண்டிவனம் தி.மு.க. MLA வெற்றிக்கு எதிராக வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மனு, மனுவை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திண்டிவனம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் சீதாபதி சொக்கலிங்கம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்தும் வெற்றி பெற்றதாகவும், வெற்றியை சொல்லாது என அறிவிக்கக் கோரியும் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பதில் மனுவில், தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அ.தி.மு.க. வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கோரியிருந்தார். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் வெற்றிக்கு எதிரான பிரதான வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன